குஜராத்தில் தொடரும் சோகம்: மூச்சு திணறல், மீண்டும் மூன்று பேர் உயிரிழந்த பெரும் சோக சம்பவம்!
Gujarat Illegal Goal Mine Accident
குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு, மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேட் என்ற கிராமத்தில், சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது.
இந்த சுரங்கத்தில் குழிதோண்டிக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று தொழிலாளிகள் நேற்று பலியாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலியான தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட விரோத நிலக்கரி சுரங்கம் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கைது செய்வதற்கு உண்டான முயற்சிகளையும் போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், சுரங்கம் தோன்றுவதற்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே அந்த மூன்று தொழிலாளர்களும் நச்சு ஆய்வை சுவாசித்து பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதே பேட் மாவட்டத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து மூன்று தொழிலாளர்கள் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Gujarat Illegal Goal Mine Accident