அதிகாலையில் பயங்கரம்: சொகுசு பேருந்து மீது மோதிய லாரி... பயணிகளின் கதி என்ன?
Gujarat lorry collided bus 6 died
குஜராத், சிகோத்ரா கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அமதாபாத் நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் டயர் திடீரென வெடித்ததினால் பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.
டயர் மாற்றும்போது பயணிகள் சிலர் பேருந்தை விட்டு கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். சிலர் பேருந்தின் முன்பு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி திடீரென பேருந்தின் பின்னால் அதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நின்று கொண்டிருந்த பேருந்து மீது அதி வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Gujarat lorry collided bus 6 died