அட கொடுமையே! அமெரிக்காவில் உள்ளவருக்கு 8 வருஷமாக சம்பளம் கொடுத்த குஜராத் மாநில அரசு!  - Seithipunal
Seithipunal


கடந்த எட்டு ஆண்டுகளாக, அமெரிக்கா சென்ற அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு, குஜராத் மாநில அரசு சம்பளம் கொடுத்து வந்தது அம்பலம் ஆகி உள்ளது. 

குஜராத் மாநிலம், பஞ்சா கிராமத்தில் அவ்மாநில அரசின் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாவனா பட்டேல் என்ற பெண் ஆசிரியை பணியாற்றி வந்துள்ளார். 

ஆனால், இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறி உள்ளார். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும் இந்த பள்ளிக்கு வந்து பணியாற்றி வந்ததாகவும் தெரிய வருகிறது. 

இந்த நிலையில், இது குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். 

அவரின் அந்த புகாரில், ஆசிரியை பாவனா பட்டேல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியறிவிட்டார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத சம்பளத்தை பெற்று வருகிறார். 

பள்ளிக்கு வராமல் பாவனா பட்டேல் சம்பளம் வாங்குவதும், அவரால் மாணவர்கள் கல்வி கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். 

ஆசிரியை பாவனா பட்டேல் குறித்த இந்த செய்தியை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர், இந்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியை பாவனா பட்டேல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat USA Teacher Issue BJP Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->