பஞ்சாப்பில் பரபரப்பு - பொற்கோவிலில் முன்னாள் துணை முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்பு துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஈட்டியுடன் காவல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுக்பீர் சிங் பாதலின் ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் பஞ்சாப் பொற்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் நாராயண் சிங் சவுரா என்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அகாலிதளம் கட்சியின் முந்தய ஆட்சியில் செய்த தவறுகளுக்காக சுக்பீ சிங் பாதலுக்கு, சீக்கிய அமைப்பு மத தண்டனை விதித்ததனால், அவர் பொற்கோயிலில் தூய்மை மற்றும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gun shoot on ex deputy chief minister Sukhbir Singh in punjab


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->