சிலைக்காக ஆந்திராவில் போராட்டம்! தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்த திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


மண்டல் கமிஷன் தலைவர் சிலை அமைக்க போடப்பட்ட பீடத்தை இடித்த குண்டூர் நகராட்சி! 

திராவிட தேசம் என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பிற்கு சிறப்பு அழைப்பாளராக வீசிக தலைவர் திருமாவளவன் அழைக்கப்பட்டார். மண்டல் கமிஷன் தலைவர் பி.பி மண்டல் அவர்களுக்கு குண்டூர் நகராட்சியில் அனுமதியுடன் சிலை வைக்க போடப்பட்ட பீடம் இடிக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதாவது "ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் மண்டல் கமிஷனின் தலைவராக இருந்து இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பரிந்துரை செய்த பி.பி மண்டல் அவருக்கு நன்றி கடனாக ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் அவரின் திருவுருவச் சிலை நிறுவ குண்டூர் நகராட்சி அனுமதி உடன் இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒன்று கூடி பீடம் அமைத்துள்ளார்கள்.

அந்த நிகழ்வில் ஆந்திராவில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களும் பங்கேற்றார்கள். பி.பி மண்டலின் பேரப்பிள்ளை சூரஜ் மண்டல் வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால் சிலையை நிறுவுவதற்கு முன்பே ஆந்திர மாநில அரசு அந்த பீடத்தை தகர்த்து இருக்கிறது. குண்டூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இது பி.பி மண்டல் அவர்களுக்கு செய்கிற மிகப்பெரிய அவமரியாதை. இந்த போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது. அதே இடத்தில் பி.பி மண்டல் திருவுருவ சிலையை அமைக்க ஆந்திர மாநில அரசு முன்வர வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறேன். 

அதேபோல தமிழக அரசும் பி.பி மண்டல் அவர்களுக்கு இங்கே திருவுருவ சிலை நிறுவுவது அவசியம் ஆகும். அவருடைய பங்களிப்பு மகத்தானது அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் சமுகம் உருவாக்குவதற்கு  மண்டலின் பரிந்துரைத்து தான் காரணமாக அமைந்தது.

நீண்ட காலமாக கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். அதை தகர்த்தெறிந்தவர் பி.பி மண்டல். 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா கட்சியின் ஆட்சி காலத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் நியமிக்கப்பட்ட கமிஷன்தான் மண்டல் கமிஷன் அதன் தலைவர் தான் பி.பிமண்டல். எனவே அவருக்கு ஓபிசி சமூகத்தினர் மட்டுமல்ல சமூக நீதிச் சமூகங்கள் அனைவரையும் நன்றி கடன் பெற்று இருக்க வேண்டும். 

இதில் என்ன பெரிய வேடிக்கை என்றால் ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் அவர்களுக்கும் என்டிஆர் அவர்களுக்கும் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சிலை நிறுவ முடியும். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு சிலை என்கிற கணக்கில் ஓய்எஸ்ஆர் அவர்களுக்கு சில எழுப்பப்பட்டு இருக்கிறது. அதேபோல நகரின் முக்கியமான சந்திப்புகளில் மையங்களில் பிரம்மாண்டமாக என்.டி ராமராவ் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால் அகில இந்திய அளவில் ஓபிசி சமுதாய மக்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் பிபி மண்டல். முதல் முதலாக வட இந்தியாவில் ஒரு பகுதியில் சில நிறுவப்பட்டுள்ளது. தென்னிந்தியா பொறுத்தவரை ஆந்திராவில் முதல் சிலை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை தகர்த்தெறிந்து இருக்கிறார்கள் என்பதை கேட்டு வேதனை அளிக்கிறது. ஆந்திர அரசு அந்த சிலையை திறப்பதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

ஆந்திராவில் உள்ள விசிக கட்சி சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் ஆந்திர முதலமைச்சரை சந்தித்து ஆந்திர விசிக சார்பில் கோரிக்கமான வழங்கப்படும். தேவைப்பட்டால் குண்டூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தெரிவித்துக்கொள்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேட்டி அளித்தார். 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guntur municipality demolished the pedestal on which the statue of Mandal Commission president was erected


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->