அனுமன் கோயிலில் கஞ்சா பிரசாதம்.. பரவசத்தில் பக்தர்கள்.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனுமன் கோவிலில் நைவேத்தியமாக கஞ்சா படைக்கப்படுகிறது. மத்தியபிரதேசம் மாநிலம் சித்ரகூட் பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.

அதற்கு காரணம் இந்த அனுமன் கோவிலில் வழங்கப்படும் கஞ்சா பிரசாதம் தான். பொதுவாக அனுமன் கோயில்களில் பிரசாதமாக லட்டு, பூந்தி, அடை அல்லது துளசி போன்றவை வழங்கப்படும். ஆனால் இந்த கோவிலில் வித்தியாசமாக கஞ்சா வழங்கப்படுகிறது.

அதன்படி அனுமனுக்கு நைவேத்தியமாக கஞ்சா படைக்கப்படுகிறது. மேலும் அனுமனுக்கு படைக்கப்பட்ட கஞ்சா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் ஆகும் வழங்கப்படுகிறது. கஞ்சா பிரசாதம் என்பது சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரையும் மகிழ்ச்சியாக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே உள்ளது. 

காலம் காலமாக இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாலிசாவை பாராயணம் செய்து ஆர்த்தியில் பங்கேற்று தங்களால் இயன்றதை தானமாக கொடுத்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் இந்த கோவிலில் காலையில் செய்யப்படும் பூஜையில் லட்டு பிரசாதமாகவும், அதற்குப் பிறகு நடைபெறும் பூஜையில் பழங்கள் பிரசாதமாகவும், நண்பகல் பூஜையில் கஞ்சா பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hanuman temple kanja prasadham in Madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->