ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்; 7வது இலங்கை பந்துவீச்சாளராக சாதனை படைத்த மகேஷ் தீக்க்ஷன.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடைபெற்றது. போட்டி மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு, 255 ரன்கள் எடுத்தது. அதில்,அணி ரச்சின் ரவீந்திரா சிறைப்பட ஆடி 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்க்ஷன 04 விக்கெட்டும், ஹசரங்க 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்ததாக, ஆடிய இலங்கை அணி 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. போட்டியில்  79 ரன்கள் எடுத்திருந்த  ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 07-வது இலங்கை பவுலராக மகேஷ் தீக்க்ஷன சாதனை படைத்துள்ளார்.

மேலும் சமிந்த வாஸ் (2003), லசித் மலிங்க (2007), துஷ்மந்த மதுசங்க (2018) ஆகியோருக்கு பின், வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 04-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் தீக்க்ஷன படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahesh Theekshana Hat trick wicket in ODI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->