கலிபோர்னியாவில் காட்டுத்தீ ;2 பேர் பலி, பல்லாயிரம் பேர் தீயினால் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..?
Wildfire in California Los Angeles
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ பரவியுள்ளது. இது வேகமாக பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த காட்டுத் தீயில் சிக்கி 02 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதோடு, மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன், அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருவதாகவும், இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருவதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
Wildfire in California Los Angeles