தேசிய கொடி விற்பனையால் 500.₹ கோடி வருமானம்.! அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் எண்ணத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்கள் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இதற்கிடையில், பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிய பின் அதனை புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்தும் கூட ஹர்கர் திரங்கா என்ற வெப்சைட்டில் அப்லோடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப் பட்டது. 

அந்த வகையில் சுதந்திர தினத்தன்று மாலையில் 6 கோடிக்கும் அதிகமான செல்பி புகைப்படங்கள் அந்த இணையத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டதாக மத்திய அரசு கூறியது. இத்தகைய சூழலில், மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 30 கோடி தேசியக்கொடிகள் விற்பனையானதாக அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு தகவல் தெரிவித்து இருக்கிறது.

இந்த தேசியக்கொடிகள் விற்பனையின் மூலம் ரூ.500 கோடி அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Har kar Tiranga Plan gained 500 Crores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->