அதானி மூலம் தேச நலனுக்கு பாதிப்பு?...உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஹிண்டன்பர்க்  நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது.

மேலும் அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும்,  அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம்  வெளியிட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலதிபர் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, இது தொழில் துறையில் தற்போது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க் விவாகரத்திற்கும், தற்போது எழுந்துள்ள குற்றச் சாட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் விஷால் திவாரி,  தேச நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harm to national welfare by adani public interest petition in supreme court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->