விவசாயத்தை மேம்படுத்த அரசு ஏதேனும் முன்முயற்சிகளை எடுத்திருக்கிறதா?வைத்திலிங்கம் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
Has the government taken any initiatives to improve agriculture?
பாராளுமன்ற கூட்டத் தொடரில் இன்றுபாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் பேசும்போது தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், பண்ணை நடைமுறைகளில் நவீன திறன்களைப் பயன்படுத்துதல், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தல் வழிகளை மேம்படுத்துதல் போன்ற அதன் விவரங்கள் என்ன? என கேள் எழுப்பினர். அதற்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான அமைச்சர்பகீரத் சௌத்ரி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இன்று 04.02.2025 அன்று விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், பண்ணை நடைமுறைகளில் நவீன திறன்களைப் பயன்படுத்துதல், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தல் வழிகளை மேம்படுத்துதல், விவசாய பொருட்களுக்கு விலை ஸ்திரப்படுத்துதல், விவசாயத்தில் புதுமைகளை கடைப்பிடித்தல், உரம், நீர் பயன்பாட்டில் உள்ள விரயங்களைக் குறைத்தல் போன்றவற்றுக்கு அரசு ஏதேனும் முன்முயற்சிகளை எடுத்திருக்கிறதா?அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்று எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான மாநில அமைச்சர்பகீரத் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
விவசாய உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல முக்கிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
விவசாய தரவு, புவிசார் தரவு போன்றவைகளை கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை சிறந்த பயிர் கண்காணிப்பு, மண் மேலாண்மை மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்துவது ஒரு முக்கிய முயற்சியாகும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கடந்த பத்து ஆண்டுகளில் 2900 பயிர் வகைகளை உருவாக்கியுள்ளது, அவற்றில் 2661 வகைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரியல் மற்றும் உயிரற்ற அழுத்தங்களைத் தாங்கக்கூடியவை ஆகும். விவசாயத்தின் உற்பத்தி மற்றும் அறுவடைக்கு பிந்தைய உற்பத்திக்காக சுமார் 156 தொழில்நுட்பங்கள்/இயந்திரங்கள்/செயல்முறை நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.
மீன்கள் மற்றும் கால்நடைகளின் உற்பத்தி பெருக்கம், அவைகளின் நோய்களுக்கான தடுப்பூசி உருவாக்கம் ஆகியவைகளுக்கும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி கிருஷி விக்யான் கேந்திராக்கள் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் பயிற்சிகள், கள அளவிலான செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய பொருட்களை சந்தைப்படுத்த இ-நாம், கிசான் ரயில் மற்றும் கிசான் உடான் போன்றவைகளை அரசுஉருவாக்கி கொடுத்துள்ளது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் ஊக்குவிப்பு இடைத்தரகர்களைக் குறைத்து விவசாயிகளுக்கான சந்தை அணுகலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அக்ரி-டெக் ஸ்டார்ட்அப்கள் மற்றும் அக்ரி பஸார் போன்ற ஆன்லைன் தளங்கள் விவசாயிகளை நேரடியாக வாங்குபவர்களுடன் இணைக்க உதவுகின்றன. இவைகள் சிறந்த விலை மற்றும் அதிகரித்த வருமானத்தை உறுதி செய்கின்றன.
இரசாயன உரங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மண் பரிசோதனை அடிப்படையிலான சமச்சீர் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை ஐசிஏஆர் பரிந்துரைக்கிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டில் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கிறது. மேலும், பாசன நீரை கணிசமாக சேமிக்க பல்வேறு பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் உட்பட திறமையான நீர்ப்பாசன நுட்பங்கள் மூலம் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைக்கிறது. மேலும், பாசன நீரை கணிசமாக சேமிக்க பல்வேறு பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் உட்பட திறமையான நீர்ப்பாசன நுட்பங்கள் மூலம் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறது. மண் ஆரோக்கிய அட்டைத் திட்டம், மண்ணுக்கு ஏற்ற உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, விரயத்தைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது என பேசினார்.
English Summary
Has the government taken any initiatives to improve agriculture?