ஹத்ராஸ் மத நிகழ்வில் உயிரிழப்பு சம்பவம் - போலே பாபா தலைமறைவு..!!
Hathras Stampede Tragedy Bhole Baba Escaped
நேற்று (ஜூலை 2) உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தராவ் தாலூக்காவிலல் உள்ள முகல்கடி என்ற கிராமத்தில் ஒரு ஆன்மீக நிகழ்வு நடைபெற்றது. இந்த சொற்பொழிவு நிகழ்வை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். ஏராளமானோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தனை மக்கள் கூடிய கூட்டத்திற்கு போதுமான எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் இது ஒரு சிறிய அளவிலான கூட்டம் என்று கூறியே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உ. பி. போலீசார் 48 பேர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், போலே பாபாவின் சீடர்கள் 12 ஆயிரத்து 500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல் ஆளாக போலே பாபா கிளம்புகையில், அவரிடம் ஆசி பெறுவதற்காக கூட்டத்தினர் முண்டியடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தான் 134 பேர் வரை மிதிபட்டு, மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த துயர நிகழ்வுக்கு காரணமான போலே பாபா இந்த சம்பவம் பற்றி அறிந்தும், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து யாரையும் பார்க்கவில்லை. மேலும் தனது மொபைலையும் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார் என்று தெரிய வந்துள்ளது.
English Summary
Hathras Stampede Tragedy Bhole Baba Escaped