தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை - இறையன்பு அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதே போல் அரசு மருத்துவமனைகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, "அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கும், உணவருந்துவதற்கும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். 

இந்த வசதிகளை அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் செய்து தந்து அதனை புகைப்படங்களுடன் சேர்த்து அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

மேலும், அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

head officer iraiyanbu write letter for cleaning staff


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->