ஜார்க்கண்டில் ''காவி கட்சி'' ஒழிக்கப்படும்... பரபரப்பு கிளப்பிய ஹேமந்த் சோரன்.!  - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

இதற்கிடையே உயர் நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரனை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் கோஷமிட்டு வரவேற்றனர். 

இந்நிலையில் ஜார்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சி தொண்டர்களை சந்தித்தார். பின்னர் அவர் பேசியிருப்பதாவது, 

எங்களுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். பா.ஜ.கவின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. ஜார்கண்டில் இருந்து காவி கட்சி முழுமையாக ஒழிக்கப்படும். 

இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிப்பதில் பாஜகவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பா.ஜ.கவினருக்கு பாடம் புகட்டினார்கள். ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி அடைவோம் என பா.ஜ.க பகல் கனவு காண்கிறது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hemant Soren speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->