முஸ்லீம் இளைஞரை கரம் பிடிக்கும் உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏவின் மகள் - இந்துத்துவாத அமைப்பினர் எதிர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


முஸ்லீம் இளைஞரை கரம் பிடிக்கும் உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏவின் மகள் - இந்துத்துவாத அமைப்பினர் எதிர்ப்பு.!!

உத்ரகாண்ட் மாநிலத்தின் பவுரி நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ யஷ்பால் தனது மகளுக்கு, முகம்மது மோனிஸ் என்ற இஸ்லாமிய வாலிபரைத் திருமணம் முடிவு செய்தனர். இந்தத் திருமணம் வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகிறது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தராகண்ட் மாநிலத்தின் இந்துத்துவாத அமைப்பினர் ஒன்றுகூடி, பவுரியின் தர்மசாலாவில் ஊர்வலமாக சென்று  யஷ்பாலின்  கொடும்பாவியை எரித்தனர். இது குறித்து பவுரி மாவட்ட விஎச்பி தலைவர் தீபக் கவுர் தெரிவித்ததாவது, 

"இதுபோன்ற திருமணங்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனென்றால் வரும் காலத்திற்கு இவை தவறான முன் உதாரணங்களை உருவாக்கும். ஆகவே, யஷ்பாலின் மகள் இஸ்லாமியராக மதம் மாறிவிட வேண்டும். இல்லை என்றால், அவரது இஸ்லாமிய மணமகன் நம் இந்து மதத்திற்கு மாறுவது அவசியம்’ என்றுத் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக பிரமுகரான யஷ்பால் குடும்பத்தைப்போல் முக்கியத் தலைவர்களது வீடுகளில் இரண்டு மதத்தினர் இணைந்த திருமணங்கள் பல நடைபெற்றுள்ளன. இருப்பினும், அவையெல்லாம் இந்த திருமணத்தைப் போல கடுமையாக எதிர்க்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu organizations opposes for bjp mla daughter marriege to muslim man


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->