தெலுங்கானாவில் கொடூரம்; போதைக்கு அடிமையானதை கண்டித்த கனவன்; தொண்டையை அறுத்து, மர்ம உறுப்பை வெட்டி கொலை செய்த மனைவி..!
Husband condemns drug addiction Wife kills him by slitting his throat and cutting off his private parts
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பதலிங்கப் பள்ளியை சேர்ந்தவர் 45 வயதுடைய சைலு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 01 மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர். கணவன் சைலு தனது குழந்தைகளுடன் படலிங்க பள்ளியில் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மனைவி கவிதா நிஜாம் பேட்டையில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வருந்துள்ளார். அப்போது கவிதாவுக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மனைவி இவ்வாறு போதைப் பழக்கத்திற்கு அடிமையானதை சைலு கண்டித்து வந்துள்ளார். இதனால் கவிதாவுக்கு கணவர் மீது ஆத்திரம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த 18-ந் தேதி கணவருக்கு போன் செய்து கவிதா மித்ரா ஹில்சில் உள்ள தனது தங்கை ஜோதி வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது சைலுவும் மது போதையில் வந்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். சண்டைக்கு பின்னர் அவர் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு கவிதா தனது தங்கை ஜோதி மற்றும் அவரது கணவர் மல்லேஷுடன் சேர்ந்து சைலு உடலில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, கவிதாவின் தங்கை ஜோதி சாலுவின் கால்களை பிடித்துக் கொள்ள, கவிதா தனது கணவரின் தொண்டையில் வெட்டியுள்ளதோடு, பின்னர் கணவரின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

அத்துடன், உடலை தார் பாயில் சுற்றி வனப்பகுதியில் வீசுவதற்காக ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளனர். ஆட்டோ டிரைவர் சந்தேகம் அடைந்து கேட்டதால் பிணத்தை மீண்டும் தங்கையின் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
மறுநாள் அதிகாலை அதே பகுதியில் உள்ள கட்டிட கழிவுகளில் கணவர் பிணத்தினைபோட்டு மூடிவிட்டு வந்துள்ளனர். ஆனால், ஆட்டோ டிரைவர் 03 பேர் மர்மமான பொருளை வனப்பகுதியில் வீசுவதற்கு தனது ஆட்டோவில் கொண்டு வந்ததாக போலீசில் புகார் செய்தாதுள்ளார்.

அதனை தொடர்ந்து, போலீசார் கவிதாவை பிடித்து விசாரணை நடத்தியத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீசார் விசாரணையின் போது தனது தங்கை அவரது கணவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை கவிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கவிதா, அவரது தங்கை ஜோதி, தங்கையின் கணவர் மல்லேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அரைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband condemns drug addiction Wife kills him by slitting his throat and cutting off his private parts