கரப்பான் பூச்சிகள் மற்றும் ஈக்கள் கொண்ட உணவுகளை வழங்கியதாக ஐஐடி ஹைதராபாத் மீது புகார் - Seithipunal
Seithipunal


IIT ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உணவைச் சுற்றி கரப்பான் பூச்சிகள் மற்றும் ஈக்கள் நடமாடுவதையும் ஒரு மாணவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இதை பற்றி ஹைதராபாத் ஐஐடியின் முன்னாள் பட்டதாரி ஆராய்ச்சி அறிஞர் ஷாஷ்வத் கோயல் பேசுகையில், "கல்லூரி 'மெஸ்'ல் உறுப்பினர் சேர்க்கைக்கு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். உணவில் கரப்பான் பூச்சி, ஈக்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இதை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயனற்றதாக உள்ளது, இது போன்ற மாசுபட்ட உணவை சாப்பிட்டு மாணவிகள் நோய்வாய்ப்பட்டதாக புகார் வரும்போதெல்லாம் அதற்கு பதிலாக மாணவர்கள் மீது கல்வி நிர்வாகம் பழி போடப்படுகிறது. இதனால் மாணவர்கள் Zomato மற்றும் Swiggy ஆகியவற்றில் இருந்து உணவை ஆர்டர் செய்வதாகவும், விடுதியில் உள்ள உணவை விட அந்த உணவு சிறந்ததாகவும் இருந்தாலும் கூட, தீங்கு விளைவிக்கும் வெளிப்புற உணவை மாணவர்கள் வாங்கி சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

ஐஐடி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமைக்கபடும் உணவு குறித்து பல மாணவர்கள் சமூக ஊடகங்களில் புகார் அளித்துள்ளனர். மெஸ் நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டுமல்லாமல் பல்கலைக்கழக அமைப்பை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hyderabad served unhygienic food to its students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->