தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் - இந்தியாவில் விரைவில் அறிமுகம்.!
hydrogen train intorduction in india
ஜெர்மனி நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஹைட்ரஜன் ரெயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.
இந்த ரெயிலை இயக்க ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன். அதனால் நீராவி மட்டுமே வெளியேறுகிறது.
இந்த ரெயிலை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சத்தமும் மிகக் குறைவு. ஒருமுறை எரிபொருள் தொட்டியை நிரப்பினால், அது 1000 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
முதல் கட்டமாக ஹரியானா மாநிலத்தில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரெயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டார்ஜிலிங் இமயமலை, ஊட்டி மலை, கல்கா-சிம்லா உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில்களை இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளன.
ஒவ்வொரு ஹைட்ரஜன் ரெயிலையும் உருவாக்க ரூ.80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால், டிக்கெட் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
hydrogen train intorduction in india