பீகாரில் அதிர்ச்சி!...ரூ.42 கோடி மதிப்பில் நாடு கடத்திய போதைப்பொருள் அதிரடி பறிமுதல்! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்திய நபரை பிகாரில் போலீசார் கைது செய்தனர்.

அண்மைக் காலமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து பூடான் வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருளை கடத்தப் பட்டதாகவும், அந்த  நபர் பீகாரில் இருப்பதாக கடத்தல் தடுப்பு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடக்கு பீகாரில் உள்ள முசாபர்பூரில் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது,  சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அவரிடம் இருந்து 4.2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்ததாகவும், இந்த போதைப்பொருள் அவர் வைத்திருந்த சூட்கேசில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.42 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in bihar deported drugs worth rupees 42 crore seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->