சிபிஐ விசாரணை கோரிய அதிமுக வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக கட்சியினருக்கு மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை, தங்களது சொந்தக் கட்சியின் நலன் பற்றி மட்டுமே இரண்டு கட்சிகளுமே அக்கறை கொண்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

அதிமுக அலுவலகம் சூறையாடல் வழக்கை சிபிஐக்கு மாற்று கோரிய சிவி சண்முகம் மனுவை முடித்து வைத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது,  உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகளை வேறு வழக்குகள் எங்களுக்கு இல்லையா? தமிழகத்தில் உள்ள இரு கட்சியினருக்கும் சொந்தக் கட்சியின் நலன் பற்றி மட்டுமே அக்கறை உள்ளது. மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

முன்னதாக, முதல்வர் முக ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவதூறாக பேசிய வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருவருக்கும்  இல்லை. அதிமுக, திமுக தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள மாறி மாறி குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Condemn to ADMk and DMK CV Shanmugam case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->