மீனவர்களே.. இன்று இரவு "கடல் கொந்தளிக்கும்".!! வானிலை மையம் வார்னிங்.!!
IMD waring issue to Tamilnadu Kerala fisherman
தென் தமிழகம் மற்றும் கேரள மாநில மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக அரபிக் கடல் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 42-45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் இடமும் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும். இதன் காரணமாக மாலத்தீவு பகுதியை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியிலும், கேரளா கடற்கரையிலும் கடுமையான வானிலை நிலவும்.
இதன் காரணமாக மீனவர்கள் இன்று இரவு 11:30 மணி வரை மேற்குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டிய கடலில் 1.1 மீ உயரம் வரை கடல் அலைகளின் தாக்கம் மே 14-ம் தேதி இரவு வரை கரையோரத்தில் கடல் சீற்றமாக இருக்கும். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
IMD waring issue to Tamilnadu Kerala fisherman