சாலையில் சென்ற பெண்... துப்பாக்கி முனையில் செயின் பறிப்பு! டெல்லியில் திடுக் சம்பவம்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் சாலையில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இளைஞர் துப்பாக்கி முனையில் செயினை பறித்து சென்ற சம்பவம் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

டெல்லியின் ரோகினி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அந்தப் பக்கமாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர்  துப்பாக்கியை காட்டி அந்தப் பெண் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றிருக்கிறார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இளைஞர் துப்பாக்கியை காட்டி  அந்தப் பெண்ணிடம் மிரட்டி செயினை பறிக்கும் காட்சிகள் வெளியாகி  மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

பெண்ணிடம் நகையை பறித்த அந்த நபர் தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்த சிலர் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi a man natched chain from a woman at gun point


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->