கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - பாஜக நிர்வாகிக்கு சம்மன்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் மக்களுக்கு ஓட்டுக்காக தரப்படும் பணத்தை தடுக்கபறக்கும் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 6-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்தப் பணத்தை கொண்டுச் சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் கொண்டுவரப்பட்ட பணம் குறித்து நடத்திய விசாரணையில், நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்ற நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிப்பதற்காக அவருக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோவர்த்தனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரது மகன் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax raide in bjp excuetive house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->