நாளை ஸ்தம்பிக்க போகும் நாடாளுமன்றம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இண்டி கூட்டணி! - Seithipunal
Seithipunal


இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து, இண்டி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், நாளை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கிய செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 

இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கும், ரயில்வே துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பட்ஜெட்டில் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நிதி ஒதுக்கீடு குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக இண்டி கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு காரணமாக உள்ள ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இந்த இரண்டு மாநிலங்களுக்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இண்டி கூட்டணி எம்பிகள் அனைவரும் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் முடிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDI Alliance protest announce for Budget 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->