பாலஸ்தீனத்தை ஏற்கனவே தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், கடந்த சில தினங்களுக்கு முன், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஃபா நகரத்தின் மீது வான் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 

இஸ்ரேலின் இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இத்தாக்குதல் ஒரு துரதிர்ஷ்ட வசமான தவறு. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். 

இதையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

மேலும் ரஃபா தாக்குதல் குறித்து அவர் கூறுகையில், "இஸ்ரேல் ஹமாஸின் மீதான தாக்குதலில் பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும். மேலும் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

தற்போது அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே நாடுகள் கூட்டாக சேர்ந்து பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அறிவித்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கு முன்பு 1980ம் ஆண்டிலேயே இந்தியா பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து விட்டது" என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India has Approved Palastine As Seperate Country Says Indian Home Ministry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->