இனி அனைத்திற்கும் ஒரே செயலி.. விரைவில் வெளியாகும் சூப்பர் செயலி.! - Seithipunal
Seithipunal


ஒரே செயலியின் மூலமாக அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் ரிலையன்ஸ், டாடா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே செயலியின் மூலம் பொதுமக்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மளிகைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், கால்டாக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், இந்த சூப்பர் செயலி அமலுக்கு வந்துவிட்டால் ஒரே செயலியின் மூலம் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த செயலிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தால் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பொதுமக்களால் வரவேற்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India launch Super app soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->