பழைய ஓய்வூதிய திட்டத்தால் நாடு திவாலாகும்.. முன்னாள் முதல்வரின் பேச்சால் சர்ச்சை..!
India will go bankrupt If brought old pension scheme
இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்தால் நாடு திவாலாகிவிடும் என பேசிய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
அந்த விழா மேடையில் பேசிய அவர் "பழைய ஓய்வூதிய திட்டத்தை நாம் மீண்டும் கொண்டு வந்தால் நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2005ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தால் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% ஓய்வூதிய தொகையாக வழங்க வேண்டும். கடந்த 2004ம் ஆண்டுஸஜனவரி 1ம் தேதிக்கு பிறகு ஆயுதப்படை பணியில் சேர்ந்தவர்களை தவிர அனைவருக்கும் புதிய ஓய்வு திட்டம் பொருந்தும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பணியாளர்களின் சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்கிறார்கள். இதன் காரணமாகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்" என தேவேந்திர பட்னாவிஸ் பேசியுள்ளார். நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் பாஜக தலைவரின் இத்தகைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
India will go bankrupt If brought old pension scheme