ராணுவத்தில் அக்னி வீரர்கள் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்க அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 17ஆம் தேதி வரை வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த தேர்வுக்கு திருமணமாகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திருச்சி மற்றும் வேலூரில் தேர்வு நடைபெற உள்ளது.

அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு முதலில் உடற்தகுதி தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து எழுத்து தேர்வு நடைபெறும். ஆனால், தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி முதலில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எழுத்து தேர்வு அடுத்த மாதம் மார்ச் 17ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும். மேலும் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டு மின் அஞ்சலில் அனுப்பப்படும். அதேபோல், ராணுவ பெண் போலீஸ் தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இளம்பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army agnipath selection exam changed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->