மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி!
Indian Army retaliates to Pakistans aggression
நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இந்திய விமானப்படை விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன.அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
இதனால் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று முன்தினம் சில இடங்களில் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கினர். இந்த நிலையில் நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Indian Army retaliates to Pakistans aggression