இந்திய வேகப்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு..ரசிகர்கள் கவலை!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன்  உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் ஆன வேகப்பந்து வீச்சாளரான வருண்ஆரோன் 18சர்வதேசபோட்டிகளில்விளையாடியுள்ளார்.இந்தப்போட்டிகளில்   மொத்தம்  29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக  இவர் இந்திய அணியில் 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தார். அதன் பின் மோசமான பார்ம் மற்றும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என்றாலும்  ஐ.பி.எல். தொடரில் டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியின் வெளியேற்றத்தை தொடர்ந்து அந்த அணியில் விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் (வயது 35) அனைத்து வகைபோட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது முழுமையாக அனைத்துவிதமான போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதை அறிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளும், 11 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மேலும், முதல்தரப் போட்டிகளில் 66 போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Indian fast bowler announces sudden retirement Fans are worried


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->