மாயமான இந்திய கடற்படை வீரர்: பிரதமர் தலையிட கோரிக்கை! - Seithipunal
Seithipunal


இந்திய கடற்படை வீரர் சாஹில் வர்மா கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பணியில் இருந்த போது மாயமான விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்திய கடற்படை கப்பலில் இருந்த கடற்படை வீரர் மாயமாகியுள்ளதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சாஹில் வர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார். 

மேலும் கப்பலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளில் என் மகன் இருப்பது பதிவாகவில்லை எனவும் என் மகன் எங்கே தான் சென்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கிடையே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். தங்களது மகனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Navy Mysterious issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->