ஆசிய விளையாட்டு போட்டி - ஒரே நாளில் 15 பதக்கங்களைத் தட்டி தூக்கிய இந்தியா.!
indian team won 50 medals of asian games 2023
ஆசிய விளையாட்டு போட்டி - ஒரே நாளில் 15 பதக்கங்களைத் தட்டி தூக்கிய இந்தியா.!
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் இந்தப் போட்டியில் இந்தியா,13 தங்கம், 21 வெள்ளி மற்றும் 19 வெண்கல பதக்கத்துடன் மொத்தமாக 53 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி, ஒரே நாளில் சுமார் 15 பதக்கங்களை பல்வேறு விளையாட்டுப் பிரிவில் வென்றுள்ளது. அதாவது, 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் வென்றனர். அதன் விவரம் பின்வருமாறு:-
![](https://img.seithipunal.com/media/Badminton-ew2r4.jpg)
* 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்றார்.
* குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங், தங்கம் வென்றார்.
* ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்களான அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும், ஜின்சன் ஜான்சன்,
வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
* மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹ்ரமிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.
* பேட்மிண்டன் ஆடவர் குழு பிரிவில் வெள்ளி வென்றது.
* மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளி வென்றார்.
* மகளிர் வட்டு எறிதலில் சீமா புனியா வெண்கலம் வென்றார் .
* மகளிர் ஹெப்டத்லானில் நந்தினி அகசரா வெண்கலம் வென்றார்.
* ஆடவர் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர், வெள்ளி வென்றார்.
* மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன் வெண்கலம் வென்றார்.
* துப்பாக்கி சுடுதலில் ஆடவர் ட்ராப் குழுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
* துப்பாக்கி சுடுதலில் மகளிர் ட்ராப் குழுப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது
* கோல்ஃப் ஆட்டத்தில் அதிதி அசோக் வெள்ளி வென்றார்.
* துப்பாக்கி சுடுதல் ஆடவர் தனிநபர் ட்ராப் போட்டியில் கினான் டேரியஸ் வெண்கலம் வென்றார்.
English Summary
indian team won 50 medals of asian games 2023