இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்'... வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியாரால் தயாரிக்கப்பட்ட 'விக்ரம்-எஸ்' ராக்கெட்டை இன்று காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட் 83 கிலோ எடையை தூக்கி செல்வதுடன், 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.

மேலும் இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. இந்த மூன்று செயற்கை கோள்களும் பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indias first private rocket Vikram S launched by ISRO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->