முகேஷ் அம்பானி, அதானியை விட வளர்ச்சி அதிகம்! 2023ல் கெத்து கட்டிய இந்திய பெண்.!! - Seithipunal
Seithipunal


புளும்பர்க் நிறுவனத்தின் கோடீஸ்வர பட்டியலை அடிப்படையாக வைத்து, தி எகனாமிக்ஸ் டைம்ஸ் இதழ் நடப்பு 2023ம் ஆண்டில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு, கோட்டீஸ்வரர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் பிடித்துள்ள இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் பணக்கார பெண்ணான சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் 960 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இந்திய பணக்காரர்களிலேயே சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு தான் அதிகம் உயர்வைக் கண்டுள்ளது. இதன் மூலம் சாவித்ரி ஜிண்டாலின் ஒட்டு மொத்த சொத்து 2500 கோடி டாலராக உயர்ந்து இந்திய பணக்கார பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

ஒ.பி. ஜிண்டால் மறைந்த பிறகு சாவித்ரி ஜிண்டால் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக பதவிவகிக்கிறார்.JSW ஸ்டீல்ஸ், ஜிண்டால் ஸ்டீல்ஸ் அண்ட் பவர், JSW எனர்ஜி என பல நிறுவனங்களை ஒ.பி. ஜிண்டால் குழுமம் நடத்தி வருகிறது. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டாலுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய கோடீஸ்வர பட்டியலிலேயே முதல் இடத்தை பிடித்து இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 500 கோடி டாலர் மட்டுமே உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 9230 கோடி டாலர் ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த ஆண்டு 800 கோடி டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து HCL நிறுவனத்தின் சிவ் நாடார் 2வது இடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து 700 கோடி டாலருடன் DLF நிறுவனத்தின் CEO கே.பி. சிங் 3வது இடத்தை தக்கவைத்துள்ளார்.  இந்த ஆண்டில் அதிக இழப்பைச் சந்தித்த ஒரே இந்தியர் கவுதம் அதானி மட்டும் தான். அவரது மொத்த சொத்து மதிப்பு 8510 கோடி டாலரில் இருந்து 3540 கோடி டாலராக சரிந்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தனது 2வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indias richest woman savitri jindal net worth more than mukesh gautam


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->