அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்வு..! - Seithipunal
Seithipunal


மும்பை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலண்டிற்கும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள், வைப்பு நிதி மற்றும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில் 2023 நிதியாண்டின் முதல் ஏப்ரல் - ஜூன் காலண்டிற்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதில் ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கடனுக்கான வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் உயர்த்தி 6.75% ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அஞ்சலக சிறுசேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் புதிய விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து தபால் நிலையங்களில் ஒரு வருட கால வைப்புத்தொகை 0.2 உயர்ந்து 6.8 சதவீதமாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு 0.1 உயர்ந்து 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டுகால வைப்புநிதிக்கும் 0.5 உயர்ந்து 7.5 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interest rates of Post Office Savings Schemes increased


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->