காஷ்மீர் தனி நாடா? சர்ச்சை கிளப்பி உள்ள ஏழாம் வகுப்பு வினாத்தாள்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் அரசியல் ரீதியான பல்வேறு சர்ச்சைகள் தற்பொழுது நிலவி வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே புதிய விவாதத்தினை ஏற்படுத்தி உள்ளது ஏழாம் வகுப்பு கேள்வித்தாள். பீகார் மாநிலத்தில் கிஷன்கஞ் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஏழாம் வகுப்பு தேர்வில் கீழ்க்கண்ட நாட்டு மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியில் சீனா, நேபால், இங்கிலாந்து, இந்தியா, வரிசையில் காஷ்மீர் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் தனிநாடு என குறிப்பிட்டு அந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் தற்போது விவாத பொருளாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் "இந்த கேள்வி தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலம் பெறப்பட்டது. காஷ்மீர் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டிருக்க வேண்டும். தவறுதலாக காஷ்மீர் நாட்டு மக்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு" என விளக்கம் அளித்தார்.

 இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பீகார் மாநில பாஜக நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் மாநில தலைவர் சஞ்சய் ஜெயஸ்வால் "ஐக்கிய ஜனதா கட்சி காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக நினைக்கவில்லை. மேலும் பீகார் மாநிலத்தில் உள்ள ஹிந்தி பள்ளிகளை மூடி வருகிறார்" எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்த ஐக்கிய ஜனதா தலைவர் நிர்வாகி சுனில் சிங் "காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான். யாரும் அதை மறுக்கவில்லை. தேவையில்லாமல் பாஜக இதைப் பெரிய பிரச்சனை ஆக்குகிறது" என பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is Kashmir a separate country question asked in the seventh class examination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->