வரலாற்றில் இன்று... நவீன அணு இயற்பியலின் தந்தை பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


ஜெ.ஜெ.தாம்சன் :

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தை செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் 1940ஆம் ஆண்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சர்வதேச இடம்பெயர்வோர் தினம் :

சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிற்காக பலரும் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுகின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்கள் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

j j thomsom birthday 2021


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->