எம்.எல்.ஏ-க்களுக்கு அடித்த ஜாக்பாட்.....மாத ஓய்வூதியம் இவ்வளவா? - Seithipunal
Seithipunal


சிக்கிம்  மாநிலத்தில் அம்மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் 22-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிக்கிம் முதலமைச்சர்  பிரேம் சிங் தமாங், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, ஒரு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் இனி ரூ.22,000-ல் இருந்து, ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் , இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இனி மாத ஓய்வூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.55,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.

இது மட்டுமல்லாமல், சிக்கிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்புக்கு சிக்கிம் அரசு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மானியமாக வழங்கும் என்றும் பிரேம் சிங் தமாங் அறிவித்தார். இந்த நிதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் ஆதரவு அமைப்பை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jackpot hit for MLAs monthly pension this much


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->