ஜெகன்மோகன் ரெட்டி எம்.எல்.ஏ பதவியைராஜினாமா செய்ய வேண்டும்! அண்ணனை விளாசிய சர்மிளா! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கொடுத்தால் தான் சட்டசபைக்கு நுழைவேன் என்று கூறுவது அவரது அறியாமைக்குச் சான்று என ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சர்மிளா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேச கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆளுங்கட்ச்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்தநிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஷர்மிளா ஒருவரும் உடன் பிறந்த அண்ணனையும் மறுபுறம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு  தீவிரமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது அண்ணனும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி குறித்து சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உங்களுக்கு வாக்களித்த மக்களை அவமதிக்க நீங்கள் தகுதியானவர். மக்கள் உங்களை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தது அரண்மனையில் உட்கார இல்லை.

அவர்களுக்கு இழக்கப்படும் அநிதியை கேள்வி கேட்கும் பொறுப்பு உங்களுக்கு இல்லையா? என்றும் சட்டப்பேரவை போக மாட்டேன் என்று சொல்லும் நீங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு மற்றும் எம்.எல்.ஏ பதவிக்கும் தகுதியற்றவர் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கொடுத்தால் தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று கூறுவது அவரது அறையாமைக்கு சான்று. அவர் எம்எல்ஏவாக இருக்க தகுதியற்றவர் ஆதலால் எம்எல்ஏ பதவியை ஜெகன்மோகன் ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaganmohan Reddy should resign as MLA by Sharmila


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->