ஜம்மு காஷ்மீர்: ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!
Jammu Kashmir flood 2 army man death
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 2 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 2 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்ட உயிரிழந்துள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் ஆற்றை கடக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் இரு ராணுவ வீரர்களும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதில், ஒருவரின் உடல் நேற்று இரவு மீட்கப்பட்ட நிலையில், இன்று ஒரு வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 வீரர்களின் உயிர் தியாகத்திற்கு அனைத்து ராணுவ வீரர்களும் மரியாதை செலுத்தினர்.
English Summary
Jammu Kashmir flood 2 army man death