ஐ.சி.சி சிறந்த வீரர் விருத்தி தட்டி சென்ற சம்பவகாரன் ஜஸ்பிரித் பும்ரா!
Jasprit Bumrah ICC Month Award
ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவிக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்ய, தலா மூன்று பெயர்களை ஐ.சி.சி பரிந்துரைத்தது.
சிறந்த வீரர்களின் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டேன் பீட்டர்சன் இடம்பிடித்தனர்.
டிசம்பரில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 22 விக்கெட்டுகள் வீழ்த்தி, 14.22 என்ற பந்துவீச்சு சராசரியுடன் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக அடிலெய்ட் டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்திய பும்ரா, மெல்போர்னில் நடைபெற்ற இன்னொரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் நான்கு, இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த தொடர் மூலம் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200 வதாவது விக்கெட்டை வீழ்த்தியதோடு, குறைந்த பந்துவீச்சு சராசரியில் இந்த சாதனையை எட்டிய முதல் வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Jasprit Bumrah ICC Month Award