நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முதலமைச்சர்கள் - காரணம் என்ன?
karnataga cm siddaramaiah avoide niti ayog meeting
நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கர்நாடகா மாநிலத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் நான் தீவிரமாக முயற்சித்த போதிலும், மத்திய பட்ஜெட் நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார். ஆகவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
மேகதாது, மகதாயிக்கு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நமது விவசாயிகளின் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி இன்னும் நமக்கு கனவாகவே உள்ளது.
நரேந்திர மோடியின் பார்வை பிரதமர் பதவியில் இருப்பதால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை அவரால் பார்க்க முடியவில்லை. நீதிக்கான எங்கள் போராட்டத்தில் எங்கள் மாநில மக்கள் எங்களுடன் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
English Summary
karnataga cm siddaramaiah avoide niti ayog meeting