மேகதாதுவால் தமிழகத்திற்கு தான் பலன் - கர்நாடக முதல்வர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இன்று சமர்ப்பண பூஜையை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- "கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க தயாராக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. 

தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு தேவையான அனுமதி அளித்தால், கர்நாடக அரசு திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளது. மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும். தமிழ்நாடு தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்குகிறது.

மழைக்காலங்களில் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும் போது தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும். 2022-23-ல் 665 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வருடம் அதிகமான தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 83 டிஎம்சிக்கு அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் குறைவான காலத்தில் எங்களால் அதிகமான தண்ணிர் திறந்து விட முடியாது.

தமிழகத்தில் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டும்போது கடலுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கூடுதல் நீரை மேகதாதுவில் சேமித்து வைக்க முடியும். இது கர்நாடகத்தை விட தமிழகத்திற்குத்தான் பலன் தரும். இருந்தும் அரசியலுக்காக பிரச்சினைகளை கிளப்பி விடுகிறார்கள். இந்தத்திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga cm siddharamaiah speech about megathathu scheme


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->