அதிகாலையில் கோரம்... சரக்கு வாகனம் மீது மோதிய மினி பேருந்து! 13 பக்தர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ஹாவேரி பைடாகி பகுதியில் இன்று அதிகாலை பூனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை வழியாக பயணிகளை ஏற்றி சென்ற மினி பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்த விசாரணையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பெலகாவி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே பேருந்து ஓட்டுனர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka bus accident 13 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->