பள்ளிகள் அறிவித்தது போலவே திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. 

மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த வாரத்தில் பள்ளி வேலை நாள் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்த தகவல் இணையத்தில் பரவி வந்ததைத் தொடர்ந்து, அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை ஜனவரி 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department info school open tomarrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->