ஜனவரி மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பம், குளிர் இருக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
IMD weather report January 2024
ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கிழக்கு, வடமேற்கு, மேற்கு-மத்திய மண்டலங்களின் சில பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலையானது சாதாரண அளவை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளுடன் தென் தீபகற்பத்தின் மத்திய பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வட மாநிலங்களில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மழை பெய்யும் அளவு சாதாரண அளவுக்கு குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதுடன். ‘சராசரி மழைப்பொழிவு’ அளவில் 86 சதவீதம் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டின் மத்திய பகுதியின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவு குளிர் அலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
IMD weather report January 2024