இந்தியாவில் இதுவரை பாரா கோர விபத்து வீடியோ! 15 முறை பல்டி அடித்த கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!
Karnataka car accident shocking video
கர்நாடக மாநிலத்தின் சல்லகேர் - பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மௌலா, சமீர், ரெஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், இருவர் சிறுவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், உயர் வேகத்தில் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை பல்டி அடித்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், காரில் பயணித்த ஒருவர், பல்டி அடிக்கும் போதே கீழே தூக்கி வீசப்படுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது.
விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக வேகத்தில் செல்பவதை கட்டுப்படுத்தும் நபோலீசார் டவடிக்கைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Karnataka car accident shocking video