கர்நாடக மாநிலத்தில் இனி கன்னடர்களுக்கு மட்டுமே 100 சதவீதம் வேலை - அமைச்சரவை ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு கட்டாய வேலை வாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவுத்திருந்தார்.

இது குறித்து முதலமைச்சர் சித்தராமையா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் சி கிரேட் பணிகளுக்கும், டி கிரேட் பணிகளுக்கும் கன்னடர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற மசோதா நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கன்னடர்கள் சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் கன்னடர்கள் கன்னட நிலத்தில் தங்களது வேலை வாய்ப்பு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசின் விருப்பம்.

இந்த அரசு கன்னடர்களுக்கான அரசு. கன்னடர்களின் நலனை கவனிப்பதே எங்களின் முதல் முன்னுரிமை" என்று முதலமைச்சர் சித்தராமையா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், தனியார் தொழில் நிறுவனங்களில் சி மற்றும் டி கிரேடு வேலைவாய்ப்புகள் 100% இனி கன்னடர்களுக்கு மட்டுமே என்ற இந்த மசோதா நாளை கர்நாடகா மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka chief minister announce private job reservation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->