கர்நாடகத்தில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை?.. முதல்வர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எதிர்க்கட்சிகள் குறைக்க வலியிறுத்தினாலும், மாநிலத்தின் நிதிநிலைமை சீராகும் போது அவை குறைக்கப்படும் என கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உப்பள்ளி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

இந்த பேட்டியில், "பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலையை ஆராய்ந்த பின்னர், விலை குறிப்பு தொடர்பாக முடிவு செய்யப்படும். நிதிநிலை அதிகரித்து நன்றாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல் - டீசல் விலை குறையும். 

இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது தேர்தல் பிரச்சார பணிகள் தொடங்கியுள்ளது. அவற்றில் நான் ஈடுபடுகிறேன். பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறேன். பாஜக 2 தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடையும்.

சங்கூர் சர்க்கரை ஆலைக்கென தனி வரலாறு உள்ளது. இதனை மூடுவதில் காங்கிரஸ் பங்கு உள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் என்பது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னோட்டமாக அமையாது" என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM Basavaraj Bommai Pressmeet at Uppalli Airport about Petrol Diesel Price Deduction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->