#BigBreaking:: கழுகு மோதி ஹேலிகாப்டர் விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டி.கே சிவகுமார்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பிரச்சாரம் செய்ய செல்வதற்கு ஹெலிகாப்டர்களை உபயோகப்படுத்தி வருகின்றனர்.  கர்நாடக மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஹெலிகாப்டர் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்று வருகிறார்.

அந்த வகையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பெங்களூருவில் இருந்து முல்பாகிலிக்கு சென்றிருந்த போது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரின் கண்ணாடி மீது கழுகு மோதியதில் உடைந்தது. இதன் காரணமாக பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் டி.கே.சிவக்குமாரின் ஒளிப்பதிவாளர் லேசான காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் டி.கே.சிவக்குமார் மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அவசரமாக செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய தலைவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தில் பயணம் செய்து வருகின்றனர். இன்று டி.கே.சிவக்குமார் பிரச்சாரத்திற்காக பெங்களூருவில் இருந்து கோலாருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது வானில் கழுகு மோதியது. வானத்தில் பறவைகள் விமானம், ஹெலிகாப்டர்களுக்கு ஆபத்தானவை. ஹெலிகாப்டர்களை விட விமானங்கள் பறக்கும் பறவைகளுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சம்பவத்தில் இருந்து டி.கே சிவகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka DKSivakumar travelled helicopter hit by eagle


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->